ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய தத்துவஞானி, பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். மனதின் இயல்பு பற்றிய போதனைகளுக்காக அறியப்படுகிறார். இவர் பாரம்பரிய மத மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை நிராகரித்து, அன்றாட வாழ்வில் மனிதனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறி போதித்தார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையைத் தனது சிந்தனைகளையும் எழுத்துக்களையும் மேம்படுத்துவதற்காக நிறுவினார்.