செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டு வாழ்வில் மாற்றங்களை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
அமித் கலந்த்ரிநேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள்.
கார்ல் சாண்ட்பர்க்வலிமையான உயிரோ அறிவான உயிரோ நிலைத்திருப்பதில்லை, சூழ்நிலைக்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உயிர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
சார்லஸ் டார்வின்என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன, ஆனால் அது என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.
சார்லி சாப்ளின்தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.
ஜி கே செஸ்டர்டன்நிரந்தரமானவரைப் போல கனவு காணுங்கள், ஆனால் இன்றே இறப்பவர் போலே வாழுங்கள்.
ஜேம்ஸ் டீன்வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்.
ஜான் எஃப் கென்னடிசுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
காமராசர்சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?
மகாத்மா காந்திநம் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
மைக் முர்டாக்அபாயங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவன் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான்.
முகம்மது அலிஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போல வாழுங்கள். ஏனெனில், ஒருநாள் அது உண்மையாகும்.
முகம்மது அலிவாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.
முகம்மது அலிநான் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் சோகமான மனிதர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாதவர்களே.
நிக்கோல் க்ராஸ்பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.
பெரியார்உங்கள் வாழ்க்கையின் எந்த சூழலிலும் முடியாதென்று எதுவும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆர். மாதவன்ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்!
ரோண்டா பைரன்உங்கள் நேரம் வரையரைக்குட்பட்டது, பிறருக்காக வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ்உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!
சுவாமி விவேகானந்தர்உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!
சுவாமி விவேகானந்தர்உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
சுவாமி விவேகானந்தர்ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும். அவரது வாழ்வையும் உபதேசங்களையும் எங்கும் பரப்ப வேண்டும். இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு மயிர்க்காலினூடேயும் அவற்றை ஊடுருவச் செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர்சோகம் வாழ்க்கையின் ஒரு பகுதி, ஆனால் துன்பம் நீங்கள் விரும்பி ஏற்பது.
ஜிக் ஜிக்லர்வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலாவாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
நெல்சன் மண்டேலாஎன்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். எனக்காக இன்னொருவர் அதை செய்ய முடியாது.
கரோல் பர்னெட்வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.
பெர்னார்ட் ஷாகாதல் உங்களுடன் வாழ ஒருவரை கண்டுபிடிப்பதல்ல. அவர் இல்லாமல் நீங்கள் வாழமுடியாத ஒருவரை கண்டுபிடிப்பது.
மொண்டனீஸ் ரபேல் ஒர்டிஸ்20 வயதில் பார்த்ததைப் போலவே 50 வயதில் உலகைப் பார்க்கும் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் 30 வருடங்களை வீணடித்துவிட்டான்.
முகம்மது அலிஎன் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்.
டுபக் ஷகுர்ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்உங்களின் மிகப்பெரிய ஆயுதம் வாழ்வதற்கான உங்கள் விருப்பம். அந்த ஆயுதத்தை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.
நார்மன் கசின்ஸ்நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் வாழ்க்கையிலும், திருமணத்திற்க்கு பிறகும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்தகூடியவர்.
பீட்டர் கெய்ன்அழகை நினைத்து கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கும். உங்கள் கடமையை நினைத்து கனவுக் காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்