ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினை தான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் Share on WhatsApp
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய அறிவாகும்.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
மனித சிந்தனை வளர்ச்சியின் வரலாறு முழுவதிலும் ஊடுருவிச்செல்வதும் படிப்படியாக மனிதனின் மனத்தில் உணர்வைத் தோற்றுவிப்பதும் இயங்கியல் விதிகள்தாம்.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
தத்துவார்த்த சிந்தனைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள "முந்தைய தத்துவ இயலைப் படித்து ஆராய்வதைத் தவிர வேறு விதமான வழிகள் இல்லை."
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
உயிரினங்களின் வளர்ச்சி விதியையை டார்வின் கண்டறிந்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். மணிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது, மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
முரண்பாடு எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போது உயிர்ப்பு முடிந்து, மறைவு நிகழ்கிறது.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே. உழைப்புதான் மனிதனையே உருவாக்கியது.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்Explore the wisdom of Friedrich Engels in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.