என் முதன்மையான உந்துதல் என் குடும்பத்தை ஆதரிப்பதுதான், அது காலையில் எழுவதற்கு ஒரு மோசமான காரணமல்ல. என்னை நம்பியவர்களைக் கவனித்துக்கொள்வதுதான் எப்போதும் என் உந்துதலாக இருந்துள்ளது.
டோனி பார்சன்ஸ் Share on WhatsApp
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினை தான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது.
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் Share on WhatsApp
ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.
பா ரஞ்சித்
இரவில் வீடு திரும்பாதபோது, உன்னை நினைத்து ஏங்கும் ஒருவர் இருப்பது, மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று.
மார்கரெட் மீட் Share on WhatsApp
விளையாடுபவர்களைத் தெரிந்து, அவர்களை நேசிக்கும்போது, எந்த விளையாட்டும் முக்கியத்துவம் பெறுகிறது.
டபிள்யூ. பி. கின்செல்லா Share on WhatsApp
குடும்பம் என்பது இரத்த உறவுகளை மட்டும் கொண்டதல்ல, எவருக்காக நாம் இரத்தம் சிந்துவோமோ அவர்களையும் உள்ளடக்கியது.
சார்லஸ் டிக்கன்ஸ் Share on WhatsApp
கூட்டம் என்பீர், குழுமம் என்பீர், இனம் என்பீர், குடும்பம் என்பீர்: எப்படி அழைத்தாலும், யார் நீங்கள் என்றாலும், உங்களுக்கு ஒன்று தேவை.
ஜேன் ஹோவர்ட் Share on WhatsApp
எங்களைப் பொறுத்தவரை, குடும்பம் என்பது ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து, துணையாக நிற்பதே.
பார்பரா புஷ் Share on WhatsApp
உங்கள் குடும்பத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள் உங்களுக்கு கடவுளின் பரிசு, நீங்கள் அவர்களுக்குப் போலவே.
டெஸ்மண்ட் டூட்டு Share on WhatsApp
குடும்பத்தின் அன்பும் நண்பர்களின் பாராட்டுகளும் செல்வத்தையும் சலுகைகளையும் விட மிகவும் முக்கியமானவை.
சார்லஸ் குரால்ட் Share on WhatsApp
குடும்பம் ஒரு ஆபத்தான முயற்சி, ஏனென்றால் அன்பு எவ்வளவு பெரியதோ, இழப்பும் அவ்வளவு பெரியது... அதுதான் சமரசம். ஆனால் நான் அனைத்தையும் ஏற்றுக்கொள்வேன்.
பிராட் பிட் Share on WhatsApp