உண்மை சொல்வது விவேகம். அதை அன்புடன் சொல்வது இன்னும் பெரும் விவேகம்.
மாக்சிம் லாகேஸ் Share on WhatsApp
வாழ்நாள் முழுமைக்குமான உறவு என்பது திருமணத்தைப் பற்றியது அல்ல. அது இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் தொடர்பை பற்றியது. அதற்கு இருவரும் முயற்சிக்க வேண்டும்.
கோல்டி ஹான் Share on WhatsApp
நாம் ஒருவருக்கொருவர் காயப்படுத்தும் விதத்தில் அல்லாமல், குணப்படுத்தும் விதத்தில் பேசுவது முக்கியம்.
பராக் ஒபாமா Share on WhatsApp
தகவல்தொடர்பில் மிகப்பெரிய சிக்கல், அது நடந்ததாக நாம் கொள்ளும் மாயையே.
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Share on WhatsApp
உங்கள் மனைவி உங்கள் பேச்சை கவனிக்க வேண்டுமென விரும்பினால், வேறொரு பெண்ணிடம் பேசுங்கள்; அவள் உங்களை மட்டும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருப்பாள்.
சிக்மண்ட் பிராய்ட் Share on WhatsApp
பேசுவதற்கு முன், சொல்ல வந்ததன் பொருளைத் தெளிவாக அறிந்துகொள், பின்னர் பேசு.
எபிக்டெட்டஸ் Share on WhatsApp
மந்தமான புத்தியுடையோரை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் நம்பகமானவை அல்ல.
ஹுவாங் போ Share on WhatsApp
பேசுவதற்கு முன் உங்களையே கேளுங்கள், இது அன்பானதா? அவசியமானதா? உண்மையானதா? மௌனத்தை மேம்படுத்துகிறதா?
சத்ய சாய் பாபா Share on WhatsApp
பேசுவதற்கு எதிர்ச்சொல் கேட்பது அல்ல. பேசுவதற்கு எதிர்ச்சொல் காத்திருப்பது.
ஃபிரான் லெபோவிட்ஸ் Share on WhatsApp
சொல்ல ஏதுமில்லையெனில், அமைதியாய் இரு; உண்மையான ஆர்வம் உந்தும்போது, சொல்ல வேண்டியதைச் சொல், அதை அனலாய் சொல்.
டி. எச். லாரன்ஸ் Share on WhatsApp
கேட்கத் தயாராக இருக்கும்போது மட்டுமே வார்த்தைகள் மற்றவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிறிஸ்டோபர் ரீவ் Share on WhatsApp
ஒருவரிடம் அவர்களைப் பற்றிப் பேசுங்கள், அவர்கள் மணிக்கணக்கில் கேட்பார்கள்.
டேல் கார்னகி Share on WhatsApp
உங்கள் கருத்தைப் பகிர்வது பயனற்றது என்று சொல்பவர், அவருடைய கருத்தைத்தான் பகிர்கிறார்.
ஜாக் புட்சர் Share on WhatsApp
உலகில் பாதி பேர் சொல்ல நிறைய இருந்து சொல்லத் தெரியாதவர்கள்; மற்ற பாதி பேர் சொல்ல ஒன்றுமில்லாமல் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்.
இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp
நன்றாகப் பேசுவது போலவே, நன்றாகக் கேட்பதும் வலிமையானது, உண்மையான உரையாடலுக்கு அத்தியாவசியமானது.
சீன பழமொழி Share on WhatsApp