ஒரு படைப்பாற்றல் மிக்க மனிதன் சாதிக்கும் எண்ணத்தினால் மட்டுமே தூண்டப்படுகிறான், பிறரை வெல்லும் ஆசையினால் அல்ல.
அய்ன் ராண்ட்
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
பெர்னார்ட் ஷா
பேரார்வம் இல்லாமல், பெரிதாக யாரும் எதையும் இவ்வுலகில் சாதித்ததில்லை.
டொனால்டு டிரம்ப்
ஒன்றை அடைவதற்கு அதன் பின்னே ஓடி அலைபவனை விட, தனக்கு வேண்டியதை அடைவதற்கு தகுதியானவனாக மாற்றிக் கொள்கிறவனே நினைத்ததை அடைவான்!
தெரியவில்லை
என் மனைவியை என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்ததுதான் நான் செய்த மிக அற்புதமான சாதனை.
வின்ஸ்டன் சர்ச்சில்
எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.
ஜெசிகா சாவிச்
நீங்கள் தவறு செய்ய தயாராகாவிடில், உங்களால் சுயமாக எதையும் சாதிக்க முடியாது.
கென் ராபின்சன்
என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.
முகம்மது அலி
உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட, உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.
ஜிக் ஜிக்லர்
வெற்றி என்பது எதை சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் எதை கடந்து சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டியது.
ஃபேன்னி கொடி
தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!
நெப்போலியன் ஹில்
உங்களால் கனவு காண முடிகிறதென்றால், அதை அடையவும் முடியும்.
சார்லஸ் குரால்ட்
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெற்றி என்பது, உங்கள் கையெழுத்து Autographஆக மாறுவதே.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்