முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு, ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
எல்லா குழந்தைகளுக்குமான தேவை ஒரு சிறிய உதவி மட்டுமே, ஒரு சிறிய நம்பிக்கை, அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் சிலர்.
உதவும் கரங்கள், பிரார்த்திக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டால், ஒருவருக்கு மட்டுமாவது உணவளியுங்கள்.
உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய கடமை; உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்.
இல்வாழ்வில் ஆணுக்குப் பெண் துணை, பெண்ணுக்கு ஆண் துணை, துணை என்றால் நட்பு, உதவி, சமபங்கு என்பதைத்தான் கூறலாம்.