விண்மீன்களை உற்று நோக்குவது போன்ற எளிய செயலுக்கும், நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.
டபிள்யூ. பி. கின்செல்லா Share on WhatsApp
காக்கையும் குருவியும் எங்கள் இனம் – விரிந்த கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
சுப்பிரமணிய பாரதியார் Share on WhatsApp
காலை விண்மீன்கள் இன்னமும் ஒருமித்துப் பாடுகின்றன, இன்னும் பாதி விழித்திராத உலகம், ஒரு புதிய நாளை உணர்கிறது.
ஜான் முயர் Share on WhatsApp
வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.
ஜான் டி ராக்பெல்லர் Share on WhatsApp
எல்லாவற்றையும் உணரும் மனநிலையில் நான், உன்னதமான காலையின் உணர்வு என்னுள் துடிப்பாய் உள்ளது.
ஜான் கீட்ஸ் Share on WhatsApp
நான் அதிகாலையில் எழுந்து குளத்தில் நீராடினேன்; அது ஒரு ஆன்மிகப் பயிற்சியாக இருந்தது, நான் செய்த சிறந்த செயல்களில் ஒன்று அது.
ஹென்றி டேவிட் தோரோ Share on WhatsApp
திருமணம் என்பது மனிதனின் இயல்பான நிலை, அதில்தான் நீங்கள் நிலையான மகிழ்ச்சியையும் காணமுடியும்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
ஒவ்வொரு காலையும் என் வாழ்வை இயற்கைக்கு இணையான எளிமையுடனும், நான் சொல்லப்போனால், அப்பழுக்கற்ற தூய்மையுடனும் அமைக்க ஒரு மகிழ்ச்சியான அழைப்பாக இருந்தது.
ஹென்றி டேவிட் தோரோ Share on WhatsApp
கதிரவன்—ஒளியை மட்டுமல்லாது, புதிய வாழ்வையும், நம்பிக்கையையும், புத்துணர்வையும் மனிதனுக்கு மீண்டும் கொண்டுவரும் அந்தப் பிரகாசமான கதிரவன்— நெரிசல் மிகுந்த நகரின் மீது தெளிவான, ஒளிரும் பெருமையுடன் வெடித்தெழுந்தது.
சார்லஸ் டிக்கன்ஸ் Share on WhatsApp
வரும் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடு; காற்றை சுவாசி, நீரைப் பருகு, கனியின் சுவையுணர், மண்ணின் வசந்தத்திற்கு உன்னை ஒப்புக்கொடு.
ஹென்றி டேவிட் தோரோ Share on WhatsApp
வாழ்வது மட்டும் போதாது... சூரிய ஒளி வேண்டும், சுதந்திரம் வேண்டும், சிறு மலர் ஒன்றும் வேண்டும்.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் Share on WhatsApp
சூரிய ஒளியில் வாழுங்கள், கடலில் நீந்துங்கள், சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்.
ரால்ப் வால்டோ எமர்சன் Share on WhatsApp
நீ எங்கு இருந்தாலும், நீ காணும் மேகங்களுடனும் சூரியன் மற்றும் நட்சத்திரங்களுடனும் ஒன்றாய் இருக்கிறாய். நீ எல்லாவற்றுடனும் ஒன்றாய் இருக்கிறாய்.
ஷுன்ர்யு சுசுகி Share on WhatsApp
இந்த நாளின் அழகைப் பாருங்கள், அதிசயங்கள் உங்களைச் சுற்றிலும் உள்ளன.
மேரி எங்கல்ப்ரீட் Share on WhatsApp
விண்மீன்களைக் காணும்போது, நம் கவலைகள் பெரிதாகத் தெரிவதில்லை, அப்படியல்லவா?
வர்ஜீனியா வூல்ஃப் Share on WhatsApp
சூரியன் நல்லவர் மீதும் கெட்டவர் மீதும் சமமாகப் பிரகாசிக்கிறது.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் Share on WhatsApp
சூரிய உதயத்திற்கு முன் காடுகளின் அழகை விட அழகு வேறெதுவுமில்லை.
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் Share on WhatsApp
அவ்வப்போது வழக்கமான பாதையை விட்டு, காட்டுக்குள் செல். அவ்வாறு செல்லும் ஒவ்வொரு முறையும், முன்னர் கண்டிராத ஒன்றைக் காண்பது உறுதி.
அலெக்சாண்டர் கிரகாம் பெல் Share on WhatsApp
அனைத்துக் கதிர்களும் ஒளிவீசும் அந்த அற்புத, அமைதியானக் கதிரவனை எனக்குத் தா.
வால்ட் விட்மன் Share on WhatsApp
ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகையைத் தன் ஆன்மாவில் தோய்த்து, தன் இயல்பைத் தன் ஓவியங்களில் தீட்டுகிறான்.
ஹென்றி வார்ட் பீச்சர் Share on WhatsApp
குறைந்ததைக் கொண்டு மகிழ்வோனே பெரும் செல்வன்; ஏனெனில், மனநிறைவே இயற்கையின் செல்வம்.
சாக்ரடீஸ் Share on WhatsApp
நாம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் சூரிய உதயம் கவலைப்படாது. யாரும் பார்க்காவிட்டாலும் கூட, அது அழகாகவே இருக்கும்.
ஜீன் அமோல் Share on WhatsApp
நாம் நடக்கும்போது பூமியில் அமைதியையும் ஆழ்ந்த நிம்மதியையும் மட்டுமே பதிக்கும்படி நடக்க வேண்டும். உங்கள் கால்களால் பூமியை முத்தமிடுவது போல் நடங்கள்.
திச் நாட் ஹான் Share on WhatsApp
இந்தச் சிறையிலிருந்து நம்மை விடுவிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களையும், இயற்கையின் அழகையும் தழுவிக்கொள்ளும் வகையில் நம் கருணையின் வட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இது சாத்தியம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
விடியல் வரும்போது எழ விரும்புகிறேன். நாய்கள் எழுந்து கிளம்பி விடுகின்றன, நானும் அப்படித்தான். அந்த நேரத்தில் என் தோட்டத்தில் இருப்பேன்.
ஜார்ஜியா ஓ'கீஃப் Share on WhatsApp
நான் அதிகாலையில் எழுபவன், அந்த அழகிய அதிகாலை ஒளியை இழக்க விரும்புவதில்லை.
டேவிட் ஹாக்னி Share on WhatsApp