உங்களை நீங்களே நேசியுங்கள் மதியுங்கள், எதற்காகவும் அதை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு தானாகவே எவ்வளவு வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
ஓஷோ
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார்
உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை, என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.
பெரியார்