கல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை, என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.
பெரியார் Share on WhatsApp
நாம் அறிந்ததை விடவோ, அறியாததை விடவோ, நாம் அறிய விரும்பாததே மிகவும் முக்கியமானது.
எரிக் ஹாஃபர் Share on WhatsApp
நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நல்ல ஆசிரியர், தன்னை பயிற்றுவிப்பதற்கும், மாணவர்களை அறிவை பெறுவதற்க்கும் தயார்படுத்துகிறார்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!
அடால்ஃப் ஹிட்லர் Share on WhatsApp
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறக்கூடிய ஒரே உண்மையான பாதுகாப்பு, அறிவு, அனுபவம் மற்றும் திறமையின் சேமிப்பே.
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பெரியார் Share on WhatsApp
கல்வி என்பது உண்மைக்கான ஒரு தேடலே. அறிவு, ஞானத்தின் வழியிலான முடிவற்ற பயணம் அது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
அறியாமையின் உச்சம் என்னவென்றால், உங்களுக்குத் தெரியாத ஒன்றை நீங்கள் நிராகரிப்பதுதான்.
வெய்ன் டயர் Share on WhatsApp
கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது, படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது, சிந்தனை அறிவை வழங்குகிறது, அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
ராபர்ட் டி நீரோ Share on WhatsApp
அந்நிய நாட்டினர் நிலவிற்கு கருவிகள் செய்து அனுப்பிக் கொண்டிருக்க இறந்த தந்தைக்குப் பார்ப்பானிடம் அரிசி, பருப்பு அனுப்பி அழுது கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.
பெரியார் Share on WhatsApp
சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்துதான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும்.
பெரியார் Share on WhatsApp
தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.
பெரியார் Share on WhatsApp
விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை.
பெரியார் Share on WhatsApp
இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.
பெரியார் Share on WhatsApp
அறிவு பெருகப் பெருக, உங்கள் உள்ளுணர்வை நம்ப நீங்கள் சுதந்திரமாகிறீர்கள்.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
அறிவு, கற்பனை, ஞானம் இவையாவும் அத்தியாவசியக் கருவிகள். ஆனால், செயல்திறனே அவற்றை முடிவுகளாக மாற்றுகிறது.
பீட்டர் டிரக்கர் Share on WhatsApp
நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள். எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.
பெரியார் Share on WhatsApp
சமுதாய்ச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை; அறிவின் உண்மையான கடைசி எல்லை நாத்திகம்.
பெரியார் Share on WhatsApp
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.
பெரியார்
உன் அறிவின் எல்லைக்குள் வாழ்ந்து செயல்படு; உன் வாழ்நாள் முழுவதும் அதை விரிவாக்கிக் கொண்டே இரு.
அய்ன் ராண்ட் Share on WhatsApp
அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அன்று, அறிந்ததாய் தோன்றும் மாயையே.
ஸ்டீபன் ஹாக்கிங் Share on WhatsApp
அறிவை நோக்கிய ஒவ்வொரு பாதையும் வெவ்வேறு விதிகளைக் கொண்டது, இந்த விதிகள் ஒன்றையொன்று மாற்ற முடியாதவை.
பராக் ஒபாமா Share on WhatsApp
அனைத்து மதங்களும், கலைகளும், அறிவியல்களும் ஒரே மரத்தின் கிளைகள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp