சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும். - எமர்ஸன்
பிரபுக்கள்
சில மனிதர்கள் பூட்ஸுகளும் முள் ஆணிகளும் (குதிரைகளைக் குத்தி ஓட்டுவதற்காகக் கால்களில் அணிந்து கொள்ளப்படுபவை முள் ஆணிகள்) அணிந்து கொண்டு குதிரை சவாரி செய்யவும், இலட்சக்கணக்கான மக்கள் சேணமும் இலகான்களும் அணிந்துகொண்டு தங்கள் மீது சவாரி செய்யக் காத்திருக்கவும் ஆண்டவன் அவர்களைப் படைத் திருக்கிறான் என்று நான் நம்பவே முடியாது. - குவிஸோட்
பிரபுக்கள்
இப்பொழுதுள்ள பிரபுக்களின் முன்னோர்கள் எவர்கள் என்பதைக் கடவுள்தான் அறிவார்! - டிஃபோ
பிரபுக்கள்
வேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அளவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக வாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம். -நிக்கோலோ மாக்கியவெல்லி
பிரபுக்கள்Explore the wisdom of Prabhu in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.