இவ்வுலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்!
தவறு செய்யும் சுதந்திரம் இல்லையென்றால் சுதந்திரம் மதிப்புக்குரியது அல்ல.
இனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.
ஜனநாயக உணர்வை வெளியில் இருந்து திணிக்க முடியாது. அது உள்ளிருந்து வர வேண்டும்.
எனது நாட்டுப்பற்று எனது நாட்டுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது பிற நாடுகளுக்கான மதிப்பையும் உள்ளடக்கியது. பிற தேசியங்கள் துன்பத்துக்குள்ளாகவும், ஒடுக்கப்படவும் என் தேசபக்தி பயன்படுமானால் அதை நான் நிராகரிக்கிறேன்.
நம் எதிரி பயமே. வெறுப்பை நாம் எதிரியாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் பயமே எதிரி.
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் தவறுகளை உணராதவனே குருடன்.
நம்முடைய எதிர்காலம் என்பது நாம் இப்பொழுது என்ன செய்கிறோம் என்பதைப் பொருத்தே உள்ளது!
நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அது போலவே நீ மாறு!
முதலில் அவர்கள் உங்களை நிராகரிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பின்னர் எதிர்த்து போராடுவார்கள். இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
வலிமை உடல் பலத்தால் வருவதல்ல, வெல்லமுடியாத வேட்கையினால் வருவது.
தேசம் என்பது, எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
சுதந்திரம் பிறப்பை போன்றது. முழு சுதந்திரம் கிடைக்கும் வரை நாம் அடிமைகள்தான்.
சுதந்திரம் விலையில்லை. அது உயிர் மூச்சு. ஒரு மனிதன் வாழ்வதற்கு என்ன கொடுக்க மாட்டான்?