அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்!
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
விடுதலை ! விடுதலை ! விடுதலை ! பறைய ருக்கும் இங்கு தீயர், புலைய ருக்கும் விடுதலை, பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!
சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே
சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.
கவலையும், பயமும் எனக்கு பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.
ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்தடடி பாப்பா.
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.