உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை. இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது.
நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே. அவை அனைத்தும் மறைந்துவிடும்.
நமக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது என்று நினைப்பதில் தான் பிரச்சினையே தொடங்குகிறது.
பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.
மனமே எல்லாம். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பரம்பொருள் என்ற ஒன்றில்லை.
அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.
ஆசையினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு ஆசையை ஒழிப்பானாக.
இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும்.