பணம் மட்டும் கொடுத்து
திருப்தி அடைய வேண்டாம்.
பணம் மட்டும் போதாது,
அவர்கள் நேசிக்கப்பட
உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை.
எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம்
உங்கள் அன்பைப் பரப்புங்கள்.
சிலர் நன்றாக வாழ்வதற்கு
ஒரு காரணம் இருக்க வேண்டும்.
அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும்.
ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை
மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை
பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.
செல்வந்தர்கள் பணம் கொடுத்து பெறக்கூடியதை
ஏழைகளுக்கு, அன்பிற்காக கொடுக்க முயற்சிக்கிறேன்.
தொழுநோயாளியை
பணத்திற்காக நான் தொடுவதில்லை;
கடவுளின் அன்பிற்காக
நான் அவர்களை மனமுவந்து குணப்படுத்துகிறேன்.
வறுமை என்பதுஉண்ண உணவின்றி,
உடுத்த துணியின்றி,
வசிக்க வீடின்றி
இருப்பது மட்டுமே என்று
சில நேரங்களில் நாம் நினைக்கிறோம்.
யாருக்கும் தேவைப்படாமல்,
யாராலும் விரும்பப்படாமல்,
யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே
வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.