எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை, நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களின் உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்கர் Share on WhatsApp
கலாச்சாரமே ஒரு தேசத்தின் ஆன்மா, அதுவே நம்மை நாமாக ஆக்குகிறது நமக்கான அடையாளத்தையும் தருகிறது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
நாம் உண்மையில் என்னவாக இருக்கிறோம் என்ற உண்மையிலிருந்து தப்பிக்கும் வழி, நம்மைப் பற்றிய நம்முடைய எண்ணமே.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி Share on WhatsApp
நேற்று நான் எடுத்த முடிவுகளால்தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
நீங்கள் ஒருவரல்ல, மூவர்: நீங்கள் யார் என்று நீங்கள் நினைப்பவர்; மற்றவர்கள் நீங்கள் யார் என்று நினைப்பவர்; நீங்கள் உண்மையில் யார்.
சத்ய சாய் பாபா Share on WhatsApp
நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதல்ல நீங்கள், பிறர் உங்களைப் பற்றி நினைப்பதல்ல நீங்கள், பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பதுதான் நீங்கள்.
தெரியவில்லை Share on WhatsApp
நாம் உண்மையில் யார் என்பது பற்றிய நமது பார்வை, சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்கேற்பவே செயல்படுவோம்.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp