உங்கள் கற்பனையே, வாழ்வின் வரவிருக்கும் காட்சிகளின் முன்னோட்டம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
நாம் எவ்வளவு தகுதியுடையவர்களாகவும், திறமையுடையவர்களாகவும் இருந்தாலும், நமக்காக ஒரு சிறந்த வாழ்க்கையை நாம் கற்பனை செய்து, அதை அடைய நம்மை அனுமதிக்கும் வரை, அதை ஒருபோதும் அடைய முடியாது.
ரிச்சர்ட் பாக் Share on WhatsApp
உன் உள்ளே கனன்று எரியும் ஆர்வத்தை அலட்சியப்படுத்தாதே. உன் திறமையைக் கண்டறிய நேரம் ஒதுக்கு.
ஸ்டீவ் ஹார்வி Share on WhatsApp
கனவுகள் முதலில் அசாத்தியமாய் தோன்றும், பின் சாத்தியமற்றதாய், முடிவில் தவிர்க்கவியலாததாய்.
கிறிஸ்டோபர் ரீவ் Share on WhatsApp
கனவு என்பது உறக்கத்தில் காண்பதல்ல, உறங்கவிடாமல் உன்னைத் துரத்துவது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் செல்லக்கூடிய இடத்துடன் ஒப்பிடுகையில், நீங்கள் எங்குமே இல்லை.
பாப் பிராக்டர் Share on WhatsApp
ஒரு கனவு கொடுக்கப்பட்டால், அதை நிஜமாக்கும் சக்தியும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
ரிச்சர்ட் பாக் Share on WhatsApp
ஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது இலட்சியம்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
உங்களுக்குள்ளே ஓர் இடத்தைக் கண்டறியுங்கள், அங்கு எதுவும் முடியாததில்லை.
தீபக் சோப்ரா Share on WhatsApp
நிரந்தரமானவரைப் போல கனவு காணுங்கள், ஆனால் இன்றே இறப்பவர் போலே வாழுங்கள்.
ஜேம்ஸ் டீன் Share on WhatsApp
பெறுவதற்கு முன், அதை உன் இதயத்திலும் மனதிலும் நினைக்க வேண்டும். நீ நம்பினால் அனைத்தும் சாத்தியமே.
நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
மிகப்பெரும் கனவுகளில் வெல்வது எளிது, காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் அனைவருக்கும் இருப்பதில்லை.
லாரி பேஜ் Share on WhatsApp
வாழ்க்கை என்பது ஒரு கனவிலிருந்து மற்றொரு கனவுக்கு பாயும் நதி போன்றது.
மிங்-டாவ் டெங் Share on WhatsApp
பெரியதாக கனவு காணுங்கள், சிறியதாக தொடங்குங்கள், ஆனால் இப்போதே தொடங்குங்கள்.
ராபின் ஷர்மா Share on WhatsApp
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.
முகம்மது அலி Share on WhatsApp
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.
ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
நீங்கள் என்னை வெல்வதாக கனவு கண்டால்கூட, எழுந்து மன்னிப்பு கேட்பது நல்லது.
முகம்மது அலி Share on WhatsApp
ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
நீ எடுக்கக்கூடிய மிகப்பெரிய சாகசம் உன் கனவு வாழ்க்கையை வாழ்வதுதான்.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.
ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை.
ஆங் சான் சூகி Share on WhatsApp
உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIII
கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
வானத்தைப் பாருங்கள், நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ?
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
வானத்தைப் பார். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்முடன் இருக்கிறது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அது அள்ளித் தருகிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
சிலர் வெற்றியைப் பற்றி கனவு காண்கிறார்கள், மற்றவர்களோ விழித்தெழுந்து அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள்.
நெப்போலியன் ஹில் Share on WhatsApp
உலகை மாற்ற முடியும் என பைத்தியக்காரத்தனமாய் நம்புபவர்களே, அதைச் செய்து முடிப்பவர்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ் Share on WhatsApp
உன் கனவை வாழ விரும்பினால், தோல்வியாளர்களை உன் வாழ்க்கையிலிருந்து நீக்குவது அவசியம்.
லெஸ் பிரவுன் Share on WhatsApp
பெரிய கனவு காணுங்கள். சிறியதாய் தொடங்குங்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தொடங்குங்கள்.
சைமன் சினெக் Share on WhatsApp
உங்களால் பறக்க முடியுமா என்று சந்தேகிக்கும் கணமே, நீங்கள் என்றென்றும் பறக்கும் திறனை இழக்கிறீர்கள்.
ஜேம்ஸ் மேத்யூ பாரி Share on WhatsApp
ஒரு கனவை நிஜமாக்க விரும்பினால், நூறு சதவீதம் உழைத்து, உன் கனவை நம்புவதை ஒருபோதும் நிறுத்தாதே.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
உங்கள் இலக்கை நிர்ணயிக்கும்போது உங்களுக்கு சிலிர்ப்பு ஏற்படவில்லை என்றால், நீங்கள் போதுமான பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவில்லை.
பாப் பிராக்டர் Share on WhatsApp
இலக்கை விட்டு உன் கண்களை அகற்றும் போது நீ காணும் பயங்கரமானவையே தடைகள்.
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
புதிய இலக்கை நிர்ணயிக்கவோ, புதிய கனவு காணவோ ஒருபோதும் வயது ஒரு தடையல்ல.
லெஸ் பிரவுன் Share on WhatsApp
ஒவ்வொரு புதிய நாளும் உன் வாழ்க்கை நாட்குறிப்பில் ஒரு வெற்றுப் பக்கம். அந்த நாட்குறிப்பை உன்னால் முடிந்த சிறந்த கதையாக மாற்றுவதே வெற்றியின் ரகசியம்.
டக்ளஸ் பேகல்ஸ் Share on WhatsApp
வாழ்க்கையின் துயரம் உன் இலக்கை அடையாததில் இல்லை. அடைய இலக்குகளே இல்லாததில்தான் துயரம் அடங்கியுள்ளது.
பெஞ்சமின் மேஸ் Share on WhatsApp
வெளியே பார்ப்பவன் கனவு காண்கிறான்; உள்ளே பார்ப்பவன் விழித்தெழுகிறான்.
லால்லி டாஸ்கல் Share on WhatsApp
இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.
டாக்டர் சியூஸ் Share on WhatsApp
சிலர் இருப்பதை கண்டு 'ஏன்?' என்பர். சிலர் இல்லாததை கனவு கண்டு 'ஏன் இல்லை?' என்பர்.
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Share on WhatsApp
உங்களால் முடியும் என்று நீங்கள் நினைப்பதை விடவும், எப்போதும் உயரமாகக் கனவு காணுங்கள், உயர்ந்ததை அடையுங்கள். உங்கள் சமகாலத்தவர்கள் அல்லது முன்னோடிகளை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மட்டும் கவலைப்படாதீர்கள். உங்களை விட நீங்களே சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
வில்லியம் ஃபாக்னர் Share on WhatsApp
உங்கள் வெற்றியின் அளவு, உங்கள் ஆசையின் வலிமையாலும், உங்கள் கனவின் பிரம்மாண்டத்தாலும், பயணத்தின் தடங்கல்களை நீங்கள் கையாளும் விதத்தாலும் அளவிடப்படுகிறது.
ராபர்ட் கியோசாகி Share on WhatsApp
கனவுகள் மெய்ப்படும், நாம் போதுமான அளவு விருப்பப்பட்டால். அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தால், எதையும் அடையலாம்.
ஜேம்ஸ் மேத்யூ பாரி Share on WhatsApp
நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp
உன் மனதில் அதைக் காண முடிந்தால், உன் கையில் அதை வைத்திருக்கவும் முடியும்.
ஸ்டீவ் ஹார்வி Share on WhatsApp
நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிகப்பெரிய சாகசம், உங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வதே.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
ஆர்வமே உன்னிடமுள்ள மிகவும் வலிமையான சக்தி. கற்பனையே ஒரு யதார்த்தத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்.
ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
உன் இலக்குகளை மிகவும் உயரமாக நிர்ணயித்து, அது தோல்வியடைந்தாலும், மற்றவர்களின் வெற்றியை விட உயரமாகத் தோல்வியடைவாய்.
ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
உங்கள் கற்பனையில் நீங்கள் உறுதியாகப் பிடித்து வைத்திருக்கும் எதுவும் உங்களுடையதாகலாம்.
வில்லியம் ஜேம்ஸ் Share on WhatsApp
பெரிதாய் சிந்திக்கவும், எல்லைகளைத் தாண்டவும், முடியாததை கற்பனை செய்யவும் உன் வாழ்வில் எப்போதும் இடமுண்டு.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp
உனக்கு என்ன வேண்டும் எனத் தெரிந்து, அது மிக அவசரமாகத் தேவைப்பட்டால், அதைப் பெற ஒரு வழியைக் கண்டுபிடிப்பாய்.
ஜிம் ரோன் Share on WhatsApp
உன் கனவுகளைப் பாதுகாத்திடு, எப்போது அவை தேவைப்படுமென்று உனக்குத் தெரியாது.
கார்லோஸ் ரூயிஸ் ஸாஃபோன் Share on WhatsApp
முதலில் நாணம் கலந்த ஆசை வரும். பின்பு, கனவுகளைக் காண உங்களுக்கு தைரியம் வேண்டும். பிறகு, நீங்கள் உழைக்க வேண்டும், மேலும் உழைக்க வேண்டும்.
எஸ்டீ லாடர் Share on WhatsApp
ஒரு கனவை அடைய விரும்புபவர் உறுதியாகவும், கவனமாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.
எஸ்டீ லாடர் Share on WhatsApp
எதிர்காலம் கோழைகளுக்குச் சொந்தமில்லை; அது துணிச்சல் மிக்கவர்களுக்கே உரியது.
ரொனால்ட் ரீகன் Share on WhatsApp
கற்பனையே எல்லாம். அதுவே வாழ்வின் வரவிருக்கும் காட்சியின் முன்னோட்டம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
எல்லாம் ஒரு கனவுடன் தொடங்குகிறது. நாம் போராடினால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம் கற்பனையின் ஒரு துளி நம்மைத் தூண்டுகிறது.
குர்பக்ஷ் சஹால் Share on WhatsApp
கரையைக் காணாமல் பயணிக்கத் துணிந்தால் அன்றி, கடலைக் கடக்க முடியாது.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் Share on WhatsApp
பிறரின் அங்கீகாரத்திற்காக உங்கள் வாழ்வை வாழ விரும்புகிறீர்களா, அல்லது உங்கள் உண்மைக்கும் கனவுகளுக்கும் ஏற்பவா?
ராபின் ஷர்மா Share on WhatsApp
ஒரு கனவு கண்டால், அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; ஒருபோதும் விடாதீர்கள்.
கரோல் பர்னெட் Share on WhatsApp
உலகை மாற்ற முடியும் என பைத்தியக்காரத்தனமாக சிந்திப்பவர்களே அதைச் செய்து முடிக்கிறார்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸ் Share on WhatsApp
பெரிய சாதனைகள் புரிய, முதலில் பெரிய கனவுகள் காண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
கான்ராட் ஹில்டன் Share on WhatsApp
உன் கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் செல். நீ கற்பனை செய்த வாழ்க்கையை வாழ்.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
சிறந்த செயல்படுபவர் ஒரு சிறந்த கனவு காண்பவராகவும் இருக்க வேண்டும்.
தியோடர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
பார்வையற்றிருப்பதை விடக் கொடுமையானது, பார்வை இருந்து பார்வையற்று இருப்பது.
ஹெலன் கெல்லர் Share on WhatsApp
பகலில் கனவு காண்பவர்கள், இரவில் மட்டும் கனவு காண்பவர்களுக்குப் புலப்படாத பல விஷயங்களை அறிவார்கள்.
வின்சென்ட் வான்கோ Share on WhatsApp
உன் மனதின் அச்சங்களால் அலைக்கழிக்கப்படாதே. உன் இதயத்தின் கனவுகளால் வழிநடத்தப்படு.
ராய் டி. பென்னட் Share on WhatsApp
நம்மில் பலர், தங்கள் பயத்திலேயே வாழ்வதால், தங்கள் கனவுகளை வாழ்வதில்லை.
லெஸ் பிரவுன் Share on WhatsApp
உங்கள் நினைவுகள் உங்கள் கனவுகளை விட பெரியவையாக ஒருபோதும் இருக்க விடாதீர்கள்.
டக் ஐவெஸ்டர் Share on WhatsApp
சிலர் வெற்றிக்காகக் கனவு காண்கிறார்கள், மற்றவர்களோ ஒவ்வொரு காலையும் எழுந்து அதை நிகழ்த்துகிறார்கள்.
வெய்ன் ஹுய்செங்கா Share on WhatsApp
ஒரு கனவை அடைய எடுக்கும் நேரம் கருதி, அதை ஒருபோதும் கைவிடாதீர்கள். எப்படியும் காலம் கடந்துவிடும்.
ஏர்ல் நைட்டிங்கேல் Share on WhatsApp
சிறிய திட்டங்கள் தீட்டாதே; அவை ஆன்மாவைத் தூண்டும் சக்தி அற்றவை.
நிக்கோலோ மாக்கியாவெல்லி Share on WhatsApp
நிலவை நோக்கிச் சுடு. அது தவறினாலும், நட்சத்திரங்களுக்குள் விழுவாய்.
நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் செல், அப்போது இன்னும் தூரம் காண்பாய்.
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
ஒரு வீட்டைக் கட்டத் திட்டம் தேவை. ஒரு வாழ்வை உருவாக்க, திட்டமோ, குறிக்கோளோ இருப்பது அதைவிடவும் முக்கியம்.
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp