Best Tamil Quotes on Equality

சமத்துவம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பா ரஞ்சித் TamilPicture Quote on man women equality son daughter capitalism feudalism marriage family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dainis Graveris

ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.

பா ரஞ்சித்
காமராசர் TamilPicture Quote on equality education violence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Agence Olloweb

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை கல்வியும் உழைப்புமே போதுமானது.

காமராசர்
காமராசர் TamilPicture Quote on education equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Teneva

படித்த ஜாதி,படிக்காத ஜாதி என்றொரு பிரிவு உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காமராசர்
மதன் மோகன் மாளவியா TamilPicture Quote on diversity inclusion equality freedom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Miles Peacock

இந்தியா இந்துக்களின் நாடு மட்டுமல்ல. இது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளின் என அனைவருக்குமான நாடு.

மதன் மோகன் மாளவியா
சேகுவேரா TamilPicture Quote on equality wealth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anastasiia Chepinska

உலகிலேயே பெரிய பணக்காரரின் சொத்துக்களை விட ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு பல மடங்கு அதிகம் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

சேகுவேரா
சேகுவேரா TamilPicture Quote on education equality social justice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வி அமைப்பின் சுவர்கள் தகர்க்கப்பட வேண்டும். கல்வி என்பது பணம் படைத்தவர்ளின் உரிமையாக இருக்கக்கூடாது.

சேகுவேரா
ஜவஹர்லால் நேரு TamilPicture Quote on freedom non violence equality justice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

நம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறர் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.

ஜவஹர்லால் நேரு
மு. கருணாநிதி TamilPicture Quote on independence day equality wish
Download Desktop / Mobile Wallpaper
Photo by engin akyurt

பெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மு. கருணாநிதி
மகாத்மா காந்தி TamilPicture Quote on patriotism freedom equality non violence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Schneider

எனது நாட்டுப்பற்று எனது நாட்டுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது பிற நாடுகளுக்கான மதிப்பையும் உள்ளடக்கியது. பிற தேசியங்கள் துன்பத்துக்குள்ளாகவும், ஒடுக்கப்படவும் என் தேசபக்தி பயன்படுமானால் அதை நான் நிராகரிக்கிறேன்.

மகாத்மா காந்தி
ஓஷோ TamilPicture Quote on equality individuality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexas_Fotos

இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.

ஓஷோ
பெரியார் TamilPicture Quote on equality man women
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samantha Sophia

ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசம உரிமை என்பது.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on god equality boss worker pariah brahmin
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andre Benz

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில், முதலாளியும் தொழிலாளியும், பார்ப்பானும் பறையனும் ஏன்?

பெரியார்
பெரியார் TamilPicture Quote on brahmin equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

பார்ப்பனர்கள் மனிதர்களாக இருக்கட்டும்; தேவர்களாக இருக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on god religion equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raul Petri

கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

பெரியார்
பெரியார் TamilPicture Quote on male women equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Drew Hays

இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.

பெரியார்
சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on caste equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greyson Joralemon

சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

சுப்ரமணிய பாரதி
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on education poverty equality social justice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ezekiel Santos

ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

சுவாமி விவேகானந்தர்