உங்களுக்கு எவ்வளவு அதிகமான அறிமுகங்கள் இருக்கிறதோ, அவ்வளவு குறைவாகவே அவர்களை அறிவீர்கள்.
சீன பழமொழி Share on WhatsApp
மகிழ்ச்சியான திருமணங்கள் ஆழமான நட்பை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது பரஸ்பர மரியாதையுடன், இன்னொருவருடைய இருப்பில் மகிழ்ச்சி காண்பது.
ஜான் காட்மேன் Share on WhatsApp
வெற்றிக்கான சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றைப் பொருள், மக்களுடன் எவ்வாறு பழகுவது என்பதை அறிவதே.
தியோடர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
ஒரு இரும்பு இன்னொரு இரும்பை கூர்மையாக்குவது போல, ஒரு நண்பன் இன்னொரு நண்பனை கூர்மையாக்குகிறான்.
சாலமன் ராஜா Share on WhatsApp
நண்பர்களைத் தேடிச் சென்றால், அவர்கள் மிகவும் குறைவாகவே தென்படுவார்கள். நீங்களே ஒரு நண்பராக மாறினால், அவர்கள் எங்கும் நிறைந்திருப்பார்கள்.
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
நிபந்தனையற்ற அன்பையும், ஏற்றுக்கொள்ளும் மனதையுமே, நீ மற்றவர்களுக்குத் தரக்கூடிய, சிறந்த பரிசாகும்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp
இந்த உலகில் நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் ஒருவருக்கு நீங்கள் உலகமாக இருக்கலாம்.
தெரியவில்லை Share on WhatsApp
நீங்கள் தேர்ந்தெடுக்கும் சூழல் உங்களை வடிவமைக்கும் என்பதால் அதில் கவனமாயிருங்கள்; நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் போலவே நீங்களும் ஆவீர்கள் என்பதால் அவர்களிலும் கவனமாயிருங்கள்.
டபிள்யூ. கிளமென்ட் ஸ்டோன் Share on WhatsApp
உங்களைப் பற்றிய உண்மையைச் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே, பொறுமை இழந்த எதிரி மிகவும் நேசிக்கும் நண்பன்.
ஆன்டிஸ்தீனஸ் Share on WhatsApp
நல்ல திருமணம் என்று ஒன்று இருந்தால், அதற்கு காரணம் அது காதலை விட நட்பை ஒத்திருப்பதால் தான்.
மைக்கேல் டி மாண்டெய்ன் Share on WhatsApp
இரண்டு நண்பர்கள் ஒரு பிரச்னையை தீர்த்துவைக்க சொன்னால், ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஏனெனில் அதனால் நீங்கள் ஒரு நண்பரை இழப்பீர்கள்; ஆனால், இரண்டு அந்நியர்கள் அதே கோரிக்கையுடன் வந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு நண்பரைப் பெறுவீர்கள்.
புனித அகஸ்டின் Share on WhatsApp
நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.
ஆர்சன் வெல்லஸ் Share on WhatsApp
உங்களுக்கு ஒரு சிறந்த நண்பர் இருக்கும்போது எதுவுமே பயமாக இருக்காது.
பில் வாட்டர்சன் Share on WhatsApp
நான் மாறும்போது மாறி, தலையசைத்தால் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை; என் நிழல் அதை இன்னும் சிறப்பாக செய்யும்.
புளூடார்ச் Share on WhatsApp
உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவிடம் அந்த உண்மையான நட்ப்பை கொண்டவன் அதைவிட மகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட் Share on WhatsApp
உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.
ஃபிரான்ஸ் ஷூபர்ட் Share on WhatsApp
உங்களுக்கு ஒரு உண்மையான நண்பன் இருந்தால், உங்கள் பங்கை விட நீங்கள் பெறுவதே அதிகம்.
தாமஸ் புல்லர் Share on WhatsApp
உலகம் உங்களை கைவிடும்போது உங்கள் கைபிடித்து நடப்பவனே உண்மையான நண்பன்.
வால்டர் வின்செல் Share on WhatsApp
உங்களைத் தாக்கும் பகைவர்களைக் கண்டு அஞ்சாதீர். உங்களைப் புகழும் நண்பர்களைக் கண்டு அஞ்சுங்கள்.
டேல் கார்னகி Share on WhatsApp
உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர் கட்டாயம் உங்கள் எதிரியல்ல. உங்கள் நற்பண்புகளைப் பேசுபவர் கட்டாயம் உங்கள் நண்பருமல்ல.
ஜென் பழமொழி Share on WhatsApp
யாரோடு சிரித்தீர்கள் என்பதை மறக்கலாம், ஆனால் யாரோடு அழுதீர்கள் என்பதை ஒருபோதும் மறக்கமாட்டீர்கள்.
கஹ்லில் ஜிப்ரான் Share on WhatsApp
ஒரு புன்னகையுடன் ஒருவரை ஒருவர் சந்திப்போம், ஏனெனில் புன்னகையே அன்பின் ஆரம்பம்.
அன்னை தெரசா Share on WhatsApp
உங்கள் நற்பெயரை மதிக்கிறீர்களெனில், நல்ல குணமுள்ளவர்களுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் தீயவர்களுடன் இருப்பதைக் காட்டிலும், தனியாக இருப்பது மேலானது.
ஜார்ஜ் வாஷிங்டன் Share on WhatsApp
எத்தனை பேரை வெற்றி பெறச் செய்கிறீர்களோ அத்தனை வெற்றி உங்களுக்கும் கிட்டும்.
ஸ்டீவ் ஹார்வி Share on WhatsApp
நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவை, பிரம்மாண்டமானவை அல்ல. நாம் ஒருவரை ஒருவர் தொடும் தருணங்கள், கவனத்துடனும், அக்கறையுடனும் இருக்கும் நேரங்களே அவை.
ஜாக் கார்ன்ஃபீல்ட் Share on WhatsApp
செல்வத்தை இழந்தவன் சிறிது இழக்கிறான்; நண்பனை இழந்தவன் அதிகம் இழக்கிறான்; ஆனால் துணிவை இழந்தவனோ அனைத்தையும் இழக்கிறான்.
மிகுவல் டி செர்வாண்டஸ் Share on WhatsApp
நட்பு தூய்மையான அன்பு. அது அன்பின் உச்ச வடிவம், எதைக் கேளாமலும், நிபந்தனைகள் அற்றும், கொடுப்பதில் மட்டுமே இன்பம் காண்பது.
ஓஷோ Share on WhatsApp
நட்புக்கொள்ள விரும்புவது விரைவான செயல்; ஆனால் நட்பு என்பது மெதுவாகக் கனியும் பழம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsApp
நண்பன் என்பவன் உன்னைப் பற்றி அனைத்தையும் அறிந்திருந்தும், இன்னும் உன்னை நேசிப்பவன்.
எல்பர்ட் ஹப்பார்ட் Share on WhatsApp
மற்றவர்களிடம் உன் இதயத்தை குறைவாகத் திறக்கும்போது, உன் இதயம் அதிகமாகத் துயருறும்.
தீபக் சோப்ரா Share on WhatsApp
நாள்தோறும் ஆதரவுகள் குறைந்துவரும் இவ்வுலகில், நட்பே மிகவும் உறுதியான ஒன்றாகும்.
கென்னத் பிரானாக் Share on WhatsApp
பழைய நண்பர்கள் விலக, புதிய நண்பர்கள் தோன்றுவர். இது நாட்கள் போலவே. ஒரு பழைய நாள் மறைய, ஒரு புதிய நாள் வரும். முக்கியமானது அதை அர்த்தமுள்ளதாக்குவதே: ஒரு அர்த்தமுள்ள நண்பன் - அல்லது ஒரு அர்த்தமுள்ள நாள்.
தலாய் லாமா Share on WhatsApp
உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.
எல்பர்ட் ஹப்பார்ட் Share on WhatsApp
இரவில் வீடு திரும்பாதபோது, உன்னை நினைத்து ஏங்கும் ஒருவர் இருப்பது, மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று.
மார்கரெட் மீட் Share on WhatsApp
தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.
ஹெலன் கெல்லர் Share on WhatsApp
மனிதர்கள் உங்களை ஊக்குவிக்கலாம், அல்லது சோர்வடையச் செய்யலாம். அவர்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்.
லெஸ் பிரவுன் Share on WhatsApp
ஒரு நண்பர் உங்களுக்குப் பிடிக்காத செயலைச் செய்தாலும், அவர் உங்கள் நண்பராகவே தொடர்வார்.
செங்கிஸ் கான் Share on WhatsApp
நம்பிக்கை என்பது மக்களை ஒன்றிணைக்கும் பசை, மற்றும் ஒரு நிறுவனத்தை முன்னோக்கி நகர்த்தும் உயவுப்பொருள்.
கொலின் பவல் Share on WhatsApp
எந்த ஒரு நல்ல செயலும் தன்னோடு முடிவதில்லை. ஒரு நல்ல செயல் மற்றொன்றுக்கு வழிவகுக்கும். நல்ல உதாரணம் பின்பற்றப்படும்.
அமீலியா ஏர்ஹார்ட் Share on WhatsApp
பகிர்ந்த மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சி; பகிர்ந்த துயரம் பாதி துயரம்.
ஸ்வீடிஷ் பழமொழி Share on WhatsApp
ஆயிரம் ஆண்டுகளில் அறிமுகமானவர்கள் அறியாததை, உன் நண்பர்கள் சந்திப்பின் முதல் நிமிடத்திலேயே அறிவார்கள்.
ரிச்சர்ட் பாக் Share on WhatsApp
அனைவரிடமும் பணிவாயிரு, ஆனால் சிலருடன் மட்டுமே நெருக்கமாயிரு. அந்த சிலரையும் நீ உன் நம்பிக்கையை அளிக்கும் முன் நன்கு சோதித்துக்கொள்.
ஜார்ஜ் வாஷிங்டன் Share on WhatsApp
உலகிற்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம்; ஆனால் ஒருவருக்கு நீங்கள் உலகமாக இருக்கலாம்.
டாக்டர் சியூஸ் Share on WhatsApp
ஒருவர் மீது உண்மையான அன்பு கொண்டால், எப்படியிருப்பினும் அவருடன் துணையாய் இருப்பீர்கள்.
ராய் டி. பென்னட் Share on WhatsApp
நண்பர்கள் உங்களிடம் கேள்விகள் கேட்பார்கள்; எதிரிகள் உங்களைக் கேள்வி கேட்பார்கள்.
கிரிஸ் ஜாமி Share on WhatsApp
காதல் என்பது தீப்பற்றிய நட்பு. அது அமைதியான புரிதல், பரஸ்பர நம்பிக்கை, பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் மன்னிக்கும் குணம். நல்ல மற்றும் கெட்ட காலங்கள் முழுவதும் அதுவே விசுவாசம்.
ஆன் லேண்டர்ஸ் Share on WhatsApp
உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும், உன்னை விரும்புபவனே உண்மையான நண்பன்.
எல்பர்ட் ஹப்பார்ட் Share on WhatsApp
நம் எதிரிகளை எதிர்க்க, பெரும் தைரியம் தேவைதான். ஆனால், நம் நண்பர்களை எதிர்க்க, அதே அளவு தைரியம் தேவை.
ஆல்பஸ் டம்பில்டோர் Share on WhatsApp
நண்பர்களை இழந்திருக்கிறேன், சிலரை மரணத்தால்... சிலரை வீதியைக் கடக்கும் சக்தியின்மையால்.
வர்ஜீனியா வூல்ஃப் Share on WhatsApp
என் எதிரிகளுக்கு நான் தகுதியானவன்தான், ஆனால் என் நண்பர்களுக்கு நான் தகுதியானவன் என்று நான் நம்பவில்லை.
வால்ட் விட்மன் Share on WhatsApp
குடும்பத்தின் அன்பும் நண்பர்களின் பாராட்டுகளும் செல்வத்தையும் சலுகைகளையும் விட மிகவும் முக்கியமானவை.
சார்லஸ் குரால்ட் Share on WhatsApp
பலர் உங்கள் வாழ்வில் வந்து போவார்கள், ஆனால் உண்மையான நண்பர்கள் மட்டுமே உங்கள் இதயத்தில் தடம் பதிப்பார்கள்.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp