இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.
ஆர்தர் ஆஷ்கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
டெனிஸ் வெயிட்லிஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!
எலான் மஸ்க்முக்கியம் என்னவென்றால், உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் மட்டுமே பழகுவது, அவர்களின் இருப்பே உங்களின் சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது.
எபிக்டெட்டஸ்சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!
ஜான் சி மேக்ஸ்வெல்பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
சுவாமி விவேகானந்தர்பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், 'நிறுத்தாதே. இப்போது துன்பப்பட்டு வாழ்நாள் முழுவதும் வெற்றியாளனாக வாழ்.' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
முகம்மது அலிவாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலாவாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
நெல்சன் மண்டேலாஇன்று முதல், நீங்கள் சந்திக்கும் அனைவரையும் நள்ளிரவில் இறந்துவிடப் போவது போல் நடத்துங்கள். நீங்கள் சேகரிக்கக்கூடிய அனைத்து கவனிப்பு, கருணை மற்றும் புரிதலை அவர்களுக்கு கொடுங்கள், மேலும் எந்த பலனையும் நினைக்காமல் அதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறும்.
ஓக் மண்டினோமகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல. அது நமது செயல்களில் இருந்தே வருகிறது.
தலாய் லாமாஉங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
ஓப்ரா வின்ஃப்ரேகரையில் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது.
ரவீந்திரநாத் தாகூர்ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.
தெரியவில்லைநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.
அடால்ஃப் ஹிட்லர்குறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!
பராக் ஒபாமாஒருபோதும் பின்வாங்க வேண்டாம். ஒருபோதும் யாரிடமும் எதையும் விளக்கவும் வேண்டாம். செய்து முடிங்கள், அதனைக்கண்டு அவர்கள் அலறட்டும்.
பெஞ்சமின் ஜோவெட்அதிர்ஷ்டம் கணிக்கக்கூடியதே. நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பிரையன் ட்ரேசிஎன்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். எனக்காக இன்னொருவர் அதை செய்ய முடியாது.
கரோல் பர்னெட்நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.
கன்பூசியஸ்உயர்ந்த இலக்குகளை கொள்ளுங்கள். அற்புதங்கள் எதிர்காலத்தில் அல்ல, இப்போதே நடக்கும். எதையும் உங்களை பின்னிழுக்கவோ தடுக்கவோ அனுமதிக்காதீர்கள்.
எலைன் கேடிநீங்கள் தவறு செய்ய தயாராகாவிடில், உங்களால் சுயமாக எதையும் சாதிக்க முடியாது.
கென் ராபின்சன்முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி, முதல் அடியை எடுத்து வைப்பதே.
மார்க் ட்வைன்மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.
ராபர்ட் ஷுல்லர்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் மட்டுமே உங்களால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும், அது உங்கள் சுயமுன்னேற்றம் மட்டுமே.
ஆல்டஸ் ஹக்ஸ்லிஒரு மரத்தை நட்டிருக்க சிறந்த நேரம் 20 வருடத்திற்க்கு முன்பு. அதன் பிறகு இப்பொழுது.
சீன பழமொழிமுயற்சியை கைவிடாதீர்கள். நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் தருணம் இதுவாக இருக்கலாம்.
கிரெக் ஆண்டர்சன்இன்றே தொடங்கி இருக்கலாம் என்று அடுத்த வருடம் இதே நாள் நீங்கள் நினைக்கலாம்!
கரேன் லாம்ப்தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.
லெனின்என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.
முகம்மது அலிமுன்னாள் உள்ள மலைகள் உங்களை சோர்வாக்குவதில்லை, உங்களை சோர்வாக்குவது காலனியில் உள்ள கூழாங்கற்களே.
முகம்மது அலிஎப்போதும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நீங்கள் இப்போது எதை விதைக்கிறீர்களோ, அதை பின்னர் அறுவடை செய்வீர்கள்.
ஓக் மண்டினோதன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
சுவாமி விவேகானந்தர்எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
சுவாமி விவேகானந்தர்செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.
நியூட் கிங்ரிச்அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் ஈவுத்தொகை அதிக உழைப்பு, அதிக லாபம்.
ரே க்ரோக்திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.
ஸ்டீபன் கிங்வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்.
வின்ஸ் லோம்பார்டிதொடங்குவதற்கான வழி பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவதே.
வால்ட் டிஸ்னிநம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
வின்ஸ்டன் சர்ச்சில்தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நம்மை நிரந்தரமாக சுத்தப்படுத்துவதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம்.
ஜிக் ஜிக்லர்நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
ஆல்பர்ட் ஸ்விட்சர்வெற்றி என்பது எதை சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் எதை கடந்து சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டியது.
ஃபேன்னி கொடிநீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜான் டி ராக்பெல்லர்தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!
நெப்போலியன் பொனபார்ட்தோல்வியிலும், தொடர் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி சாத்தியம்.
நெப்போலியன் பொனபார்ட்வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!
அடால்ஃப் ஹிட்லர்வலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்ஒருபோதும் செய்யும் செயலை கைவிடாத நபரை நீங்கள் வெல்ல முடியாது.
பேப் ரூத்வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.
பெர்னார்ட் ஷாவெற்றி பெறுவதற்கான விருப்பம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் பயிற்சிக்கான விருப்பமே.
பாபி நைட்முன்னோக்கி சென்றாலும் பின்னோக்கி சென்றாலும் முன்னேற்றம் உண்டு! நகர்வதுதான் முக்கியம்!
எட்கர் கெய்ஸ்உண்மையான மகிழ்ச்சி என்பது ஒருவரின் ஆற்றல் மற்றும் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பே.
ஜான் டபிள்யூ. கார்ட்னர்எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.
காமராசர்வாய்ப்பு தானாக தோன்றுவதில்லை, நீங்கள் முயற்சிக்கும்போது அது தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.
கைல் சாண்ட்லர்வலிமை உடல் பலத்தால் வருவதல்ல, வெல்லமுடியாத வேட்கையினால் வருவது.
மகாத்மா காந்திவிடாமுயற்சி ஒரு நீண்டதூர ஓட்டப்பந்தயம் அல்ல, அவை நிறைய குறுகியதூர ஓட்டப்பந்தயங்கள்.
வால்டர் எலியட்பரிதாபாத்திற்கு உரியவராக இருங்கள் அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எதைச் செய்தாலும் அது உங்கள் விருப்பமே!
வெய்ன் டயர்உங்களால் அது முடியும், ஆனால் அதை நீங்கள்தான் முடிக்க வேண்டும்.
பெஞ்சமின் டிஸ்ரேலிநீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பிரையன் ட்ரேசிவெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள். வெற்றிக்கு வேறு ரகசியம் இல்லை.
எரிக் தாமஸ்கடின உழைப்பு இல்லாமல், களைகளைத் தவிர வேறெதையும் வளர்க்க முடியாது.
கோர்டன் பி. ஹிங்க்லிஇங்கு தோல்வி மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் தோல்வி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கட்டுக்கதை.
பீட்டர் தியேல்கடந்த காலத்தில் நான் சந்தித்த சவால்கள் எதிர்காலத்தில் வெற்றி பெற உதவும்.
பிலிப் எமேக்வாலிஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.
ராபர்ட் ஷுல்லர்தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.
ராபின் ஷர்மாமுயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.
தாமஸ் ஆல்வா எடிசன்வெற்றி எனும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த சுவையூட்டி தோல்வி.
ட்ரூமன் கபோட்வெற்றியாளர்கள் தோல்வியை எற்றுகொண்டதில்லை, எற்றுக்கொள்பவர்கள் வெல்வதில்லை.
வின்ஸ் லோம்பார்டிமெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப் பிடிக்கிறது சோம்பல்! உற்சாகம் வெற்றியின் வாசல்!
ஜிக் ஜிக்லர்தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!
நெப்போலியன் ஹில்விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராபின் ஷர்மாபின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார். நீ முன்னேறுவது உறுதி!
சுவாமி விவேகானந்தர்பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
சுவாமி விவேகானந்தர்ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
தெரியவில்லைஇன்னொரு முறை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். அது ஒரு செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்கான இன்னொரு வாய்ப்பு!
தெரியவில்லைகடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
தெரியவில்லைகரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
தெரியவில்லைகடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
தெரியவில்லைஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!
வாலிஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது இலட்சியம்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
பெஞ்சமின் பிராங்க்ளின்மிகப்பெரும் கனவுகளில் வெல்வது எளிது, காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் அனைவருக்கும் இருப்பதில்லை.
லாரி பேஜ்உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIIIஉங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.
ராபர்ட் ஷுல்லர்முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.
ராபர்ட் ஷுல்லர்காயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது!
தெரியவில்லைபயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் போதாது. வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்.
டேல் கார்னகிதிட்டமிடப்பட்ட பெரிய செயல்களை விட செய்துவிட்ட சிறிய செயல்கள் சிறந்தவை.
பீட்டர் மார்ஷல்இன்றைய உங்களின் செயல் அனைத்து நாளைகளையும் முன்னேற்ற வல்லது.
ரால்ப் மார்ஸ்டன்நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? கேள்வி கேட்காதீர்கள், செயலில் இறங்குங்கள். செய்யும் செயலே நீங்கள் யார் என்பதை வரையறுக்கும்.
தாமசு ஜெஃபர்சன்நேற்று விழுந்திருக்கலாம், பரவாயில்லை இன்று மீண்டும் எழுங்கள்.
எச். ஜி. வெல்ஸ்இவனை நம்பு, அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
சுவாமி விவேகானந்தர்இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்காதீர்கள். தொடர்ந்து அடித்து அதை சூடாக்குங்கள்.
வில்லியம் பட்லர் யீட்ஸ்உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட, உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.
ஜிக் ஜிக்லர்நாம் நம்மை கைவிட்டு விடக்கூடாது, பிரச்சனைகள் நம்மைத் தோற்கடிக்க அனுமதிக்கக்கூடாது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்தெரிந்தால் போதாது; பயன்படுத்த வேண்டும். விருப்பம் இருந்தால் போதாது; செய்ய வேண்டும்.
ஜோஹன் வொல்ப்காங் வான் கோதேவிடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும் 20வது முறை எழுந்து நிற்பது.
ஜூலி ஆண்ட்ரூஸ்உங்கள் வேகத்தைத் தக்கவைக்க ஒரு வழி தொடர்ந்து பெரிய இலக்குகளை வைத்திருப்பது.
மைக்கேல் கோர்டாஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்று தீர்மானியுங்கள். நேரத்தை வீணடிக்காத எந்த ஒரு நபரும் நேரமின்மை பற்றி புகார் செய்ய வாய்ப்பில்லை. நாம் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருந்தால் எவ்வளவு செய்ய முடியும் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
தாமசு ஜெஃபர்சன்இலக்குகளை நிர்ணயித்தல் உங்களால் பார்க்க முடியாததை பார்ப்பதற்காண முதல் படி.
டோனி ராபின்ஸ்பெரிய இலக்கை பின்தொடரும்போது வலிமையையும் உறுதியையும் சேர்த்து கொள்ளுங்கள்.
கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.
ஜார்ஜ் எஸ் பாட்டன்தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பள்ளி, ஆசிரியர்கள் என அனைவரையும் குறை சொல்ல கற்றுக்கொடுக்க பட்டிருக்கிறோம். ஆனால் அனைத்து தவறுகளும் உங்களுடையதே அதுதான் மாறவேண்டும்.
கேத்தரின் ஹெப்பர்ன்நாம் பல தோல்விகளை சந்திக்கலாம் ஆனால் தோற்கடிக்கப் பட்டுவிடக்கூடாது.
மாயா ஏஞ்சலோபிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.
ராபர்ட் ஷுல்லர்உங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.
லியோ புஸ்காக்லியாகற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.
ஜிம் ரோன்அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
தெரியவில்லைசெய்ய விரும்புவதை இப்போதே செய்யுங்கள். எதிர்காலம் யாருக்கும் உறுதியானதல்ல.
வெய்ன் டயர்கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்நான் மெல்ல நடப்பவன்தான், ஆனால் பின்னோக்கி நடப்பவனல்ல.
ஆபிரகாம் லிங்கன்நான் தவறுகளைச் செய்யவே பிறந்தேன், சரியானவற்றை போலியாக செய்வதற்காக அல்ல.
டிரேக்எனது வெற்றிக்கு காரணம் - நான் எப்போதும் எனது தோல்விகளுக்கு என்னைத்தவிர வேறு எந்த காரணத்தையும் கூறுவதில்லை.
புளோரன்சு நைட்டிங்கேல்எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.
ஜெசிகா சாவிச்உங்களிடம் உள்ள நல்ல திட்டத்துடன் இப்போதே தொடங்குவதென்பது மிகச்சிறந்த திட்டத்துடன் பின்னொரு நாளில் தொடங்குவதை காட்டிலும் சிறந்தது.
ஜார்ஜ் எஸ் பாட்டன்வெற்றிபெற, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும்.
நீகாஸ் கசந்த்சாகீஸ்வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.
கன்பூசியஸ்வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி எனக்கு வலுவாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் வெல்ல முடியாது.
ஓக் மண்டினோ