அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
ஒன்றை அடைவதற்கு அதன் பின்னே ஓடி அலைபவனை விட, தனக்கு வேண்டியதை அடைவதற்கு தகுதியானவனாக மாற்றிக் கொள்கிறவனே நினைத்ததை அடைவான்!
ஒன்றை சரியாக செய்ய தொடங்கும் வரை அல்ல, அதில் தவறே செய்ய முடியாத வரை பயிற்சி செய்ய வேண்டும்!
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
ஒரு தேசத்தின் மகுடம் அதன் சிந்தனையாளர்கள்தான்.
ஒரு தேசத்தை ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் மாற்ற மூவரால் மட்டுமே முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
ஒழுக்கம் உடனடி தேவைக்கும், உண்மையான தேவைக்கும் இடையிலான உங்களின் தேர்வு.
ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?
கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
கடிகாரம் பார்த்தல் தவறு, நொடி முள்ளாய் நீயும் நகரு.
ஆயிரம் நேற்றுகளுக்கும் பல லட்சம் நாளைகளுக்கும் இடையில் ஒரே ஒரு இன்று மட்டுமே உள்ளது. அதைத் தவற விடாதீர்கள்!
கடினமான பாதைகளே மிக அழகான இடங்களுக்கு இட்டுச் செல்கின்றன.
கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.
கரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
காயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது!
நேற்றும் நீங்கள் நாளை என்று தான் சொன்னீர்கள் ☹️
பிரச்சினைகளுக்காக போராடுவதை விட முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.
கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
ஒவ்வொரு சிறந்த மகளுக்குப் பின்னரும் ஒரு அற்புதமான தந்தை இருக்கிறார்.
எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், தந்தைகள் எப்போதும் உயரமாகவே தெரிகின்றனர்.
சில சூப்பர் ஹீரோக்களுக்கு என்று தனி உடை இல்லை. அவர்கள் அப்பா என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
எனக்கு இளவரசன் இருப்பதால் நான் இளவரசியல்ல, என் தந்தை அரசர் என்பதால் நான் இளவரசி.
இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.
நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களின் அளவைக் கொண்டு உங்கள் திருமணம் வாழ்வு ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. அந்த போராட்டங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறுதியால் வரையறுக்கப்படுகிறது.
உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து தொந்தரவு செய்ய திருமணம் அனுமதிக்கிறது.
இன்னொரு முறை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். அது ஒரு செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்கான இன்னொரு வாய்ப்பு!
உங்களிடம் கேளுங்கள், நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?
உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!
எதிர் காலத்தை கணிப்பதற்கு சிறந்த வழி, அதை உருவாக்குவதே!
எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்.
எல்லாப் பறவைகளும், மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையை எதிர்கொள்ள மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.